Sunday, June 10, 2018

ஈசுபரி அல்வா ஸ்டால்

"ஈசுபரி அல்வா ஸ்டால்"

எங்கள் ஏரியாவிலேயே ரொம்ப ஃபேமஸான ஸ்வீட் கடை. நெறைய ஸ்வீட் செஞ்சாலும் அவங்க செய்யற அல்வாவுக்குத்தான் அங்க ரொம்ப மவுசு. எப்ப பாத்தாலும் கடைல ஒரு பத்து கஸ்டமராவது இருப்பாங்க. அல்வாவுக்கு பாதி கூட்டம்னா, கல்லால இருக்கற ஓனர் கருப்புசாமி பொண்ணு ஈசுபரிக்காக மீதி கூட்டம். 12 வயசுலயே 16 வயசு வளர்ச்சி. பாவாடையும் மேல இறுக்கமா ஒரு சட்டையும் போட்டிட்டிருக்கும். போதாதா நம்ம மக்களுக்கு. சீஸுபரி ஹை மஸ்து மஸ்துன்னு பாடாத கொறைதான். கண்ணு ரெண்டும் நல்ல முட்டைக்கண்ணு. கோவில் சிலைக்கு எண்ணெய் தேச்சுவிட்டா மாதிரி ஒரு பளபளப்பான கருப்பு. அந்த வயசுலயே பைசா அகலப் பொட்டு. இந்த ஈசுபரி 5 ஆவது வரைக்கும் என் கூட படிச்சது வேற விஷயம்.கண்ணு ரெண்டும் நல்ல முட்டைக்கண்ணு. கோவில் சிலைக்கு எண்ணெய் தேச்சுவிட்டா மாதிரி ஒரு பளபளப்பான கருப்பு. அந்த வயசுலயே பைசா அகலப் பொட்டு. இந்த ஈசுபரி 5 ஆவது வரைக்கும் என் கூட படிச்சது வேற விஷயம்.

எங்க வீட்டிலிருந்து எங்க போகணும்னாலும் அந்த கடையைத்தான் தாண்டி போகணும். நான் ஸ்கூலுக்குப் போகும்போதும் சரி, எங்கயாவது கடைக்குப் போகும்போதும் சரி, ஈசுபரி தன்னோட 32 பல்லையும் காமிச்சு, "என்ன அய்யரே, நம்ம அல்வா சாப்பிட்டுப் பாக்கறது"ன்னு சத்தமா சொல்லுவா. எனக்கு அவ கொரலைக் கேட்டாலே அலர்ஜி. நெறம் குயிலுன்னா கொரல் மயிலு. அவ பார்வையும், அப்படியே அல்வாவை வழிச்சு விழுங்கறா மாதிரி என்னை வழிச்சு விழுங்கும். இதுக்காகவே நான் அவங்க கடை வரும்போது ரோடை க்ராஸ் பண்ணி எதிர்பக்கமா போவேன். அப்படியும் விட மாட்டா. அவ அப்படி கேக்கும்போது அவ அப்பன்காரன் என்னமோ உலக மகா ஹாஸ்யத்தை கேட்டா மாதிரி குலுங்கி குலுங்கி சிரிப்பான்.
Image may contain: dessert and food

ஊரே அவங்க கடை அல்வாவை புகழ்ந்தாலும் எனக்கென்னவோ அங்க வாங்கப் புடிக்காது. வீட்டுல ஸ்வீட் வாங்க சொன்னா நான் ஆரியபவன் போயிதான் வாங்குவேன். என்னமோ அந்த கருப்புசாமியைப் பாத்தாலே அவங்க கடைல ஒண்ணும் வாங்கத் தோணாது. எப்ப பாத்தாலும் எண்ணெய் வடியற ஒடம்போட மேல் சட்டை கூட போடாம இருப்பான். இன்னொரு காரணம் அவன் கைப்பக்குவதாலதான் அவங்க கடை அல்வா அவ்வளோ பிரமாதமா இருக்குன்னு பீத்திப்பான். அதுல எனக்கு ஒரு சந்தேகம். எப்படி இவனுக்கு மட்டும் இப்படி ஒரு பக்குவம் வருது, இதுல எதோ வில்லங்கம் இருக்குன்னு ஒரு சந்தேகம். அதுனால அங்க வாங்க மாட்டேன் எதுவும். ஒருதடவை எங்க அப்பா அங்க அல்வா வாங்கிட்டு வந்துட்டாரு. நான் எவ்வளோ கெஞ்சியும் திங்கவே இல்ல. வீட்டுலயும் யாரும் திங்கக் கூடாதுன்னு சண்டை போட்டு அல்வா முழுசும் நாய்க்கு வெச்சுட்டேன். (அது மோந்து பாத்துட்டு தின்னாத போச்சுங்கறது வேற விஷயம்)

சேல்ஸ் ஜாஸ்தியாக ஜாஸ்தியாக அவனால ஒரு கடைல கூட்டத்த கண்ட்ரோல் செய்ய முடியல. அதுனால நேரெதிர்க்க இன்னொரு கடை ஆரம்பிச்சு அதுல அவன் பொண்ண ஒக்கார வெச்சுட்டான். அங்க அல்வா மட்டும்தான் சேல்ஸ். இப்ப எனக்குதான் பிரச்சினை. ஸ்கூலுக்கு போறப்ப வரப்ப அவ பாக்கற பார்வையும், பேசற பேச்சும், அப்படியே என்ன விழுங்கிடறா மாதிரி இருக்கும். நான் எதையும் கண்டுக்காம போயிடுவேன்.

ஒருநாள் நான் வெளில கெளம்பரப்ப அவன் கடை வாசல்ல ஒரே கும்பல். கூச்சலும் அதிகமாக இருக்கவே நான் என்னன்னு எட்டிப் பாத்தேன். கருப்புசாமியை போலீஸ்காரங்க வேன்ல ஏத்திட்டிருந்தாங்க. அல்வா டேஸ்ட்டா இருக்கணும்னு அதுல கொஞ்சம் போல கஞ்சா கலந்து செய்வானாம். அதுனாலதான் மக்கள் அவன் அல்வாவுக்கு அடிமையா இருந்திருக்காங்க. நல்ல வேளை நம்ம தப்பிச்சோம்னு நெனச்சேன்.

அங்கிருந்து போகும்போது ஈசுபரிய பாத்தேன். பரிதாபமா என்ன பாத்தா. அவளை அப்படி பாக்க முடியல என்னால. எப்பவும் போல பேசாம நகந்துட்டேன்.

கருத்துதவி - எழுத்தாளர் ராஜேந்திர குமார்

No comments:

Post a Comment